Tuesday, March 15, 2011

Sunday, February 27, 2011

சூத்திரங்கள்

This Blog
Linked From Here
This Blog
Linked From Here


m&wbike
அலையும் கூந்தல் முகத்தை மறைக்க

ரகசிய உதடுகள் காது கடிக்க

உஷ்ண மூச்சில் கழுத்து தகிக்க

மார்பழுத்தி முதுகு பஞ்சாய் ஆக

கால்கள் அகற்றி தொடைகள் உரச

கைகள் இரண்டும் இடுப்பை அழுத்த

இந்த இறுக்கம்

காதலா?

காமமா?

நம்பிக்கையின்மையா?

அறிந்து கொள்ள ஆசை

மனம் பிறழ்ந்து போகும் முன்

ஸ்பெக்ட்ரம் புடவை புதிய டிசைன் அறிமுகம்.

spectrum_pudavai

"ஸ்பெக்ட்ரம் புடவை" என்ற புதிய டிசைன் புடவை அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது. இந்தப் புடவை சிஐடி காலனியில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது. புடவை வேண்டுபவர்கள், மொத்த கொள்முதல் புடவை வியாபாரியை அணுகவும்.

Wednesday, February 23, 2011

கலைஞர் வீட்டை நெருங்கும் சி.பி.ஐ.!

‘ராஜா கைய வெச்சா அது ராங்கா போனதில்லை...’ என்ற பாடல் பாண்டியன் அறையில் சி.டி. பிளேயர் மூலம் ஒலித்துக் கொண்டிருந்தது.


‘‘பாட்டை கவனித்தேன். வெளியில இருக்குற நிலைமைக்குத் தோதா பாட்டு இல்லையே...’’ என்று அலெக்ஸ், சொல்ல, சட்டென சி.டி. பிளேயரில் வால்யூமைக் குறைத்தார் அர்ச்சனா.

‘‘தேங்க்ஸ்...’’ என்று சொல்லிவிட்டு, செய்திச் சுரங்கத்தை திறந்தார் அலெக்ஸ்.

‘‘முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மீது இதோ, அதோ... என்று எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கைகள் விறுவிறுவென ஆரம்பமாகி விட்டது. டிசம்பர் 8&ம் தேதியன்று காலையில் ராசா தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள் என்று அத்தனை இடங்களிலும் அதிரடியாக புகுந்தார்கள் சி.பி.ஐ. போலீஸார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் முறைகேட்டை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சி.பி.ஐ.யின் சிறப்புப் படை போலீஸார்தான் பெரம்பலூரில் இருக்கும் ராசாவின் வேலூர் கிராமத்து வீட்டில் ஆரம்பித்து டெல்லி துக்ளக் சாலையில் இருக்கும் அவருடைய வீடு வரையில் அதிரடியாக புகுந்து புறப்பட்டார்கள்...’’

‘‘ஆரம்பமே அதிரடியா இருக்கே...’’

‘‘அதே நாள் காலை ஏழரை மணிக்கெல்லாம் பெரம்பலூர் அருகில் இருக்கும் வேலூர் கிராமத்தில் ராசாவின் சொந்த வீட்டுக்கு 8 அதிகாரிகள் நுழைந்தனர். ரெய்டு நடந்து கொண்டிருக்கும்போதே, பெரம்பலூர் எம்.எல்.ஏ., ராஜ்குமாரும் மாவட்டச் செயலாளர் துரைசாமியும் ராசா வீட்டுக்கு ஓடோடி வந்தனர். ஆனால், வீட்டுக்குள் யாரையும் விடவில்லை. பத்தேகால் மணிக்கு ஒரு கை பை, இரண்டு சூட்கேஸை எடுத்துச் சென்றார்கள். அடுத்து, ராசாவின் நண்பர் சாதிக் பாட்சா நடத்தும் ‘சாதிக் ரியல் எஸ்டேட்’ அலுவலகத்துக்கு வந்த அதிகாரிகள், சாதிக்கின் தம்பி ஜாபர் அலி முன்பாக அங்கிருந்த கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க் ஒன்றை எடுத்து, ஒரு பையில் வைத்து சீல் வைத்தார்கள். பின்பு, பெரம்பலூரில் இருக்கும் வங்கிகளுக்குச் சென்று சாதிக் தொடர்பான வங்கிக் கணக்குகள் குறித்து விசாரித்திருக்கிறார்கள்...’’

‘‘உருப்படியாக ஏதும் கிடைத்ததாமா?’’

‘‘பொறும்... அதெல்லாம் உடனே சொல்லிவிடுவார்களா என்ன? சென்னையிலும் அறிவாலயம் பின்புறம் இருக்கும் சாதிக்கின் வீட்டுக்கும் ஒரு டீம் காலையிலேயே சென்றது. வீடு முழுவதும் சோதனையிட்ட அதிகாரிகள், பதினொன்றரை மணிக்கு சாதிக்கை மட்டும் விசாரணைக்காக அவருடைய காரிலேயே அழைத்துச் சென்றார்கள். எங்கோ ஒரு இடத்தில் வைத்து விசாரித்தார்கள். மாலையில் வீடு திரும்பி மீண்டும் சோதனை நடத்தி, வீட்டிலிருந்து நிறைய ஆவணங்களை சூட்கேஸ்களில் அடைத்து எடுத்துச் சென்றார்கள். அவர்கள் விசாரணையை முடிக்கும் முன்பே வருமான வரித்துறையினரும் அந்த வீட்டுக்குள் புகுந்து அலச ஆரம்பித்தார்கள்...’’

‘‘அப்ப ரெய்டெல்லாம் முடிஞ்சுடுச்சா?’’

‘‘அன்று மாலை வரையில் சோதனைகள் முடிவடையவில்லை. சோதனை என்பது அதிகாரிகளுக்கு இரண்டாம் பட்சம்தான். சாதிக்தான் அதிகாரிகளுக்கு முக்கியமாம்...’’

‘‘அதான் அவரை பிடித்து நிறைய விசாரித்து விட்டார்களே?’’

‘‘ஒரு நாள் விசாரணை போதாதில்லையா? தன்னிடம் இருக்கும் சொத்துக்கள் என்னென்ன... அதெல்லாம் எங்கிருக்கிறது? யார் யார் பெயரில் இருக்கிறது? என்பதையெல்லாம் சொல்ல வேண்டாமா? அதற்காகத்தான் சாதிக்கை கொஞ்சம் விட்டுப் பிடிக்க நினைத்திருக்கிறார்களாம் சி.பி.ஐ. அதிகாரிகள். சாதிக் சி.பி.ஐ. பிடியில் சகஜமாக இருந்ததை நிருபர்கள் பலரும் பார்த்திருக்கிறார்கள்...’’ என்ற அலெக்ஸ், ‘‘ஓவர் டூ பெரம்பலூர்’’ என்றார்.

புரியாமல் அலெக்ஸை மேலிட்டுப் பார்த்தார் பாண்டியன்.

‘‘தொடர்ந்து அதே நேரத்தில் பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையில் இருக்கும் ராசாவின் சகோதரர் கலியபெருமாளின் வீடு, ராஜா தியேட்டர் அருகில் இருக்கும் அவருடைய ஐ.டி.சி. குடோன் ஆகிய இடங்களிலும் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள். காலையில் இருந்து மாலை வரை அங்கு நடந்த ரெய்டில் சிக்கிய ஆவணங்களை மூன்று சூட்கேஸ்களில் வைத்து அடுக்கி அதிகாரிகள் அள்ளிச் சென்றதை ஊரே வேடிக்கைப் பார்த்திருக்கிறது...’’

‘‘அச்சச்சோ...’’

‘‘ஊர் கவலைப்பட்டது மாதிரி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். பெரம்பலூரில்தான் ‘நேற்று வரையில் ராசா மாதிரி இருந்தவரு வீட்டுல இன்னைக்கு சர்புர்ருன்னு புகுந்து டாக்குமென்டெல்லாம் அள்ளிக்கிட்டு போகுதே போலீஸுன்னு அதிர்ச்சி விலகாமல் கமென்ட் அடித்தார்களாம்...’’

‘‘நிஜம்தானே?’’

‘‘பெரம்பலூரில் இந்த ரெய்டு விஷயமும் அது தொடர்பான பேச்சுக்களும்தான் மக்களிடையே சுவாரஸ்யமாக அலையடித்துக் கொண்டிருக்கிறது. நிறைய தகவல்களை ஆளாளுக்கு பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு தகவல்தான் இது...’’ என்று சொல்லி நிறுத்தினார் அலெக்ஸ்.

‘‘என்ன சஸ்பென்ஸ் வைத்து நிறுத்துறீங்க..? சொல்லுங்க... கேட்க ஆர்வமா இருக்கு...’’ என்று பாண்டியன், அலெக்ஸை தூண்டினார்.

‘‘ராசாவின் நண்பர் சாதிக்குக்கு பெரம்பலூரில் வலதுகரமாக இருந்து செயல்படும் நான்கெழுத்துப் பிரமுகருக்கு மூன்றெழுத்துப் பெண்மணி ஒருவர் தொடுப்பாக இருக்கிறாராம். பெரம்பலூருக்கு சி.பி.ஐ. ரெய்டு வருவதற்கு முதல்நாள் இரவு பனிரெண்டு மணிக்கு மேல் அந்தப் பெண்மணியின் வீட்டு முன்பாக நான்கைந்து கார்கள் வந்து நின்றதாம். அதில் இருந்து நிறைய சூட்கேஸ்கள் இறக்கப்பட்டதாம். அக்கம் பக்கத்தவர்களெல்லாம் அதிர்ச்சி விலகாமல் பார்த்து, தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும்போதே, சி.பி.ஐ. அதிகாரிகள் பெரம்பலூருக்கு வந்து இறங்கி விட்டார்களாம்...’’

‘‘என்ன சொல்றீங்க?’’

‘‘நான் என்ன சொல்றது... ஆனால், இந்த விஷயங்கள் சி.பி.ஐ.யின் கவனத்துக்கு முன்கூட்டியே போயிருந்தா, அங்கும் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியிருக்கலாம் என்பதுதான் கூடுதல் தகவல்... ’’

‘‘ஓ, புரியுது... புரியுது! சரி, திடுமென சி.பி.ஐ. அதிகாரிகள் ராசா தொடர்பான இடங்களில் புகுந்து புறப்படுகிறார்களே... அதற்கு பிரதமர் அனுமதி கொடுத்துவிட்டாரா என்ன?’’

‘‘அவரோட அனுமதி இல்லாம அரசியல் ரீதியா செல்வாக்கோட இருக்கும் ஒரு நபர் தொடர்புடைய இடங்களில் சி.பி.ஐ. நுழையுமா என்ன? ஸ்பெக்ட்ரம் தொடர்புடைய வழக்கு விசாரணை டிசம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வருகிறது என்றதும், முன்னதாக ஏதாவது நடவடிக்கை எடுத்து அதனை கோர்ட்டுக்கு தெரியப்படுத்திவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தார் சி.பி.ஐ.யின் புதிய இயக்குநர் ஏ.பி.சிங். இதற்காக டிசம்பர் 7-ம் தேதி இரவு எட்டரை மணிக்கு பிரதமரை சந்தித்தாராம். அப்போது கூடவே உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் இருந்தாராம்.’’

‘‘மேலிட அனுமதியோடுதான் எல்லாம் நடக்கிறதா?’’

‘‘பின்னே... ‘கோர்ட் ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் ரொம்பவும் சீரியஸாக இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணையில் சி.பி.ஐ.யை உச்ச நீதிமன்றம் கண்காணிப்பதற்கு தடையில்லை என்பது போல கோர்ட்டில் தெரிவித்துவிடலாம். குஜராத் அமித் ஷா வழக்கில் உச்ச நீதிமன்றம் கண்காணிப்பை செலுத்தியது போல இந்த வழக்கிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. நாம் அதற்கு தடை போட முடியாது...’ என்று ஏ.பி.சிங் சொன்னதை ஆமோதித்தாராம் மன்மோகன் சிங்...’’

‘‘சரிதான்... தி.மு.க. தரப்பு ரியாக்ஷன் குறித்து யோசிக்கவில்லையா?’’

‘‘அதெல்லாம் யோசிக்காமலா செய்வார்கள்? கோர்ட் உத்தரவிட்டால் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி சி.பி.ஐ. பயணப்பட்டாக வேண்டும் என்பதையும் ஏ.பி.சிங், பிரதமரிடம் தெளிவாகவே சொல்லி விட்டாராம்...’’

‘‘அடுத்த கட்டம் என்றால்...’’

‘‘சி.ஐ.டி. காலனிதான். இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழி, ராசாத்தியம்மாள் ஆகியோர் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள் என்பதை சி.பி.ஐ. கண்டறிந்து விட்டது. விசாரணையைத் தொடரும்போது கனிமொழி மீதும் நடவடிக்கை வரலாம் என்பதைத்தான், நேரடியாகவே சொல்லி பிரதமரிடம் அனுமதி வாங்கி விட்டாராம் ஏ.பி.சிங்...’’

‘‘சரி, இதற்கெல்லாம் ப.சிதம்பரம் ரியாக்ஷன் என்ன?’’

‘‘அவர் என்ன செய்ய முடியும்? சி.பி.ஐ. எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு முதல்வர் கலைஞரிடம் சொல்லச் சொல்லி ப.சிதம்பரத்திடம்தான் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறாராம் பிரதமர். நடந்து கொண்டிருக்கும் எல்லா விஷயங்களும் சோனியா காந்திக்கும் ராகுல் காந்திக்கும் முறையாகத் தெரிவிக்கப்பட்டே நடப்பதாக பிரதமர் அலுவலக வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிகிறது...’’

‘‘இதற்கெல்லாம் கலைஞர் ரியாக்ஷன் என்னவாம்?’’

‘‘அதிர்ச்சிதான். சி.ஐ.டி. காலனி நோக்கி எக்காரணம் கொண்டும் சி.பி.ஐ. அதிகாரிகளோ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகளோ வந்துவிடக் கூடாது என்பதுதான் அவருடைய கவலை. இருந்தாலும், ‘இதே நிலையை மத்திய அரசு தரப்பில் தொடர்ந்தால், காங்கிரஸுடனான கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். பொங்கல் நாள் வரையில் பொறுத்திருந்து பார்க்கலாம். அதற்குள் நடவடிக்கைகளில் காட்டும் தீவிரத்தைக் குறைக்கிறார்களா என்று பார்க்கலாம். இல்லையென்றால், மாத்தி யோசிக்க வேண்டி வரும்...’’ என்று தனக்கு இணக்கமான அமைச்சர்களிடம் கவலையை பகிர்ந்து கொள்கிறாராம் முதல்வர்.’’

‘‘சி.ஐ.டி. காலனி பக்கம் சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வளவு எளிதாக வந்துவிட முடியுமா?’’

‘‘முடியாதுதான். இருந்தாலும் அவசியம் என்றால் யாராக இருந்தால் என்ன? அதற்காகத்தானே சி.பி.ஐ. இயக்குநர் பிரதமரின் அனுமதி பெற்று ஒவ்வொரு காரியத்தையும் கவனமாக செய்து கொண்டிருக்கிறார்...’’

‘‘உஷாரான ஆசாமிதான் போல...’’

‘‘யெஸ். நடக்கும் எல்லா விவரங்களையும் பார்த்த பிறகு, கலைஞர் கட்சிக்காரர்களிடம் சொல்லும் ஒரே வார்த்தை என்ன தெரியுமா?’’

‘‘ப்ளீஸ்...’’

‘‘ ‘தி.மு.க.வுக்கு எதிராக டெல்லியில் மிகப் பெரிய சதி நடக்கிறது...’ என்பதுதானாம். அனேகமாக இரண்டொரு நாளில் இதையே மையக் கருவாக வைத்து ஒரு அறிக்கை வரலாம்... பேச்சு சுவாரஸ்யத்தில் முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துவிட்டேன்...’’ என்றார் அலெக்ஸ்.

‘‘என்ன அது?’’

‘‘ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கிடைத்த பலனை அனுபவித்தவர்கள் என்று சி.பி.ஐ. மொத்தமாக 683 பேர் அடங்கிய பட்டியல் ஒன்றை கையில் வைத்திருக்கிறதாம். அதில் பெரம்பலூர் பகுதி தி.மு.க. கிளைச் செயலாளர்களில் ஆரம்பித்து, டெல்லி வரையில் ராசாவுக்கு துணையாக இருந்து செயல்பட்ட சாதிக் முதல்கொண்டு வி.வி.ஐ.பி.க்கள் பலருடைய பெயரும் இருக்கிறதாம். அவ்வளவு பேரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்பது சி.பி.ஐ. யோசனையாம். என்ன நடக்கும் என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும்...’’ என்ற அலெக்ஸிடம்,

‘‘நெக்ஸ்ட் ப்ளீஸ்...’’ என்றோம்.

‘‘தமிழகத்தை சுழற்றி அடித்த மழை-வெள்ளத்துக்கு நிவாரணம் கொடுப்பது தொடர்பாக டிசம்பர் 8&ம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைய பேசியிருக்கிறார்கள். அப்போது ஆலோசனை சொன்ன வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், ‘வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் ஐந்தாயிரம் கோடியை மத்திய அரசிடம் இருந்து கோரிப் பெற வேண்டும்...’ என்று சொன்னாராம். குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், ‘புரியாமல் பேசாதீர்கள். நிவாரணம் நம் இஷ்டத்துக்குக் கேட்க முடியாது. மத்தியிலிருந்து ஒரு குழு வந்து வெள்ள சேதத்தை மதிப்பிடும். அந்தந்த மாவட்டக் கலெக்டர்களும் சேதத்தை மதிப்பிட்டு அறிக்கை கொடுப்பார்கள். அதை வைத்துத்தான் நாம் நிதி கேட்க முடியும். அவர்கள் போடும் கணக்கிலிருந்து பத்து சதவீதமோ இருபது சதவீதமோ கூட்டி கேட்கலாம். அதைவிட்டுவிட்டு ஐந்தாயிரம், பத்தாயிரம் கோடி என்றால், பிரச்னையாகிவிடும்...’ என்று சொல்ல, வீரபாண்டியார் முகம் கறுத்துவிட்டதாம்...’’

‘‘வீரபாண்டியார் சும்மா இருக்க மாட்டாரே...’’

‘‘கூட்டம் முடிந்து வெளியே வந்ததும், ‘ரொம்ப அறிவாளிதான்யா நீ...’ என்று துரைமுருகனை பொரிந்துவிட்டாராம் வீரபாண்டியார்.’’

‘‘சரிதான்...’’

‘‘அடுத்தாண்டு மார்ச் மாதம் 20-லிருந்து 24-ம் தேதிக்குள் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தைத் துவக்கலாம் என்று ஜோதிடர் ஒருவர் நாள் குறித்துக் கொடுத்திருக்கிறாராம். அதன்படி, பிரசாரப் பயணத்தை அமைக்குமாறு செங்கோட்டையனை பணித்திருக்கிறாராம் ஜெயலலிதா. அந்தப் பணியில் தற்போது தீவிரமாகி இருக்கிறாராம் செங்கோட்டையன்.’’

‘‘அட...’’

‘‘ம.தி.மு.க.வின் முக்கியத் தலைவர்களில் எஞ்சி இருந்த தயாரிப்பாளர் தாணுவும் வைகோ மீது குற்றச்சாட்டுகளை அள்ளிவிட்டுவிட்டு கட்சியில் இருந்து விலகி விட்டார். தன்னுடைய மகன் திருமணத்துக்கு வைகோ வரவில்லை என்று வருத்தப்பட்டு கட்சியில் இருந்து விலகி இருக்கும் அவர், இது தொடர்பாக வைகோவுக்கு எழுதிய கடிதம் அவர் கைக்குச் செல்வதற்கு முன்பாக பத்திரிகைகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டது வைகோவுக்கு வருத்தமாம்...’’

‘‘அதற்காக என்ன செய்ய முடியும்? வேகமான உலகம். அதற்கெல்லாம் தடைபோட முடியுமா?’’

‘‘வைகோ இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருக்க, கட்சிக்காரர்களோ, தாணுவும் கட்சியில் இருந்து விலகி விட்டதை நினைத்து ரொம்பவும் வருந்துகிறார்களாம். வைகோவுக்கும் இந்த விஷயம் போக, தாணு விஷயத்தில் என்ன நடந்தது என்பதை கட்சிக்காரர்களுக்கு சொல்ல வேண்டும் என்று விரும்புகிறாராம்...’’

‘‘என்ன செய்யப் போகிறாராம்?’’

‘‘வரும் 24&ம் தேதி கட்சியின் உயர் மட்டக் குழுவைக் கூட்டி தாணு மகன் திருமண விஷயத்தில் நடந்தது என்ன என்பது பற்றி நீண்ட உரை நிகழ்த்தப் போகிறாராம். கட்சிக்காரர்களுக்கு அதன்மூலம் தன்நிலையைப் புரிய வைப்பாராம் வைகோ...’’

‘‘தன்னிலை விளக்கமா?’’

‘‘கடந்த டிசம்பர் 7&ம் தேதி ராசாத்தியம்மாள் திடுமென சென்னை, அடையாறு மலர் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். காலில் ஒரு கட்டி வந்து வெகுநாட்களாக அவதிப்பட்டுக் கொண்டிருந்தாராம். அதனை சிறுஆபரேஷன் மூலம் அகற்ற வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த ஆபரேஷனுக்காகத்தான் அவர் மலர் மருத்துவமனைக்குச் சென்றாராம். சின்ன அறுவை சிகிச்சை என்பதால், அன்று மாலையே அவர் வீடு திரும்பிவிட்டார்...’’ என்ற அலெக்ஸ், அருகில் இருந்த சி.டி. பிளேயர் வால்யூமை கூட்ட, ‘‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’’ என்ற பாடல் வேகமாக ஒலித்தது.

‘‘டைமிங்கான பாட்டு...’’ என்று சொல்லி புன்முறுவல் பூத்து, பாண்டியனுக்கு பை சொல்லி புறப்பட்டார் அலெக்ஸ்.

3947531

சர்ச்சைக்குரிய வணிக மற்றும் அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் நெருக்கமான தொடர்புள்ள அனைவரையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

சர்ச்சைக்குரிய வணிக மற்றும் அரசியல் தரகர் நீரா ராடியாவுடன் நெருக்கமான தொடர்புள்ள அனைவரையும் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

2881301161_b3ab45afdd_b

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“நம்பிக்கை”, “நாணயம்” என்றால் அதற்கு மறுபெயர் “டாடா” என்று தான் தலைமுறை தலைமுறையாக இந்தியர்கள் கருதி வந்தனர். “டாடா நிறுவனத்தினர் லஞ்சம் கொடுக்க மாட்டார்கள்” என்பதும், “டாடா நிறுவனத்தினர் அரசியலுக்கு இடமளிக்க மாட்டார்கள்” என்பதும் தான் இந்திய தொழில் துறையினர் மத்தியில் நிலவி வந்த கருத்து. துரதிர்ஷ்டவசமாக, இவையெல்லாம் பழங்கதையாக ஆகிவிட்டன.

அரசியல் வணிகத்தில் இன்று டாடாவும் விதிவிலக்கல்ல என்ற தர்மசங்கடமான கருத்து தற்போது வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. இந்தியாவின் மிகப் பழமை வாய்ந்த, புகழ் பெற்ற தொழில் நிறுவனமான டாடா குழுமத்திற்கு இந்த அவப்பெயரை பெற்றுத் தந்த பெருமை கருணாநிதி குடும்ப உறுப்பினர்களையும், தி.மு.க. அரசின் முதல்வர் கருணாநிதியையுமே சாரும்.

2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலுக்கு சற்றுமுன், திடீரென உயர் பதவி பெற்ற கருணாநிதியின் பேரனும், அப்போதைய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சருமான தயாநிதி மாறன், டாடாவின் ஸ்டார் டி.டி.எச். நிறுவனத்தின் 33 விழுக்காடு பங்குகளை சன் டி.வி. குழுமத்திற்கு சந்தை விலையை விட குறைந்த விலைக்கு அளிக்குமாறு டாடாவிற்கு நிர்ப்பந்தம் கொடுத்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

தயாநிதி மாறனால் ஊக்குவிக்கப்பட்ட, தயாநிதி மாறனின் உடன்பிறந்த சகோதரர் கலாநிதி மாறன் தலைமை செயல் அலுவலராக உள்ள சன் டி.வி. குழுமத்திற்கு டாடா ஸ்டார் டி.டி.எச்.ன் பங்குகள் கொடுக்கப்படவில்லையெனில், டாடாவின் தொலைத்தொடர்பு திட்டங்களுக்கான அனுமதிக்கு ஆபத்து ஏற்படும் என்று தயாநிதி மாறன் டாடாவை மிரட்டினார் என்ற குற்றச்சாட்டும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கருணாநிதி குடும்பத்தில் ஏற்பட்ட சண்டையை அடுத்து, தயாநிதி மாறன் ஓரங்கட்டப்பட்டு, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட போது, மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்தவர் ரத்தன் டாடா தான்.

தயாநிதி மாறனுக்கு பிறகு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஆ. ராசாவை புகழ்ந்து, பாராட்டி தன் கைப்பட எழுதிய தனிப்பட்ட ஒரு கடிதத்தை கருணாநிதிக்கு 13.11.2007 அன்று நீரா ராடியா மூலம் அனுப்பியிருக்கிறார் ரத்தன் டாடா.

தயாநிதி மாறன் தலைமையிலான தொலைத்தொடர்புத் துறையை தெளிவாக விமர்சிக்கின்ற இந்தக் கடிதம், சர்ச்சைக்குரிய வணிக மற்றும் அரசியல் தரகர் நீரா ராடியாவால் கருணாநிதியிடம் நேரடியாக அளிக்கப்பட்டு இருக்கிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் மூலம் இந்திய நாட்டிற்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதற்காக ராசாவை சிபிஐ தீவிரமாக விசாரித்துக் கொண்டு இருக்கிறது. ரத்தன் டாடாவால் நல்லவர் என்று கூறப்பட்ட ராசாவே இந்த அளவுக்கு ஊழல் புரிந்து இருக்கிறார் என்றால், அவருக்கு முன்பு தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவரும், அவருக்கு வேண்டியவர்களும் எந்த அளவிற்கு ஊழல் புரிந்து இருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது.

ரத்தன் டாடா கருணாநிதிக்கு எழுதிய கடிதத்திலிருந்து, நீரா ராடியா கருணாநிதிக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பது நன்கு தெளிவாகிறது. ரத்தன் டாடா தன்னுடைய கடிதத்தில் நீரா ராடியாவை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இந்தக் கடிதத்தின் மூலம், நீரா ராடியா கருணாநிதியின் பல்வேறு குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கமாக நடத்திய உரையாடல்களை எளிதில் தள்ளுபடி செய்துவிட முடியாது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இரண்டாவது முறை ஆட்சி அமைத்தபோது மத்திய அமைச்சர் பதவி பெறுவதற்காக 600 கோடி ரூபாய் பணத்தை தயாநிதி மாறன் தயாளுவிற்கு கொடுத்ததாக கூறப்படுவது; தொலைத்தொடர்புத் துறை ராசாவுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதில் கனிமொழி அதிக ஆர்வம் காட்டியது; தயாநிதி மாறனுக்கு தொலைத்தொடர்புத் துறை அளிக்கப்படாமல் கவனித்துக் கொண்டதற்கு கைமாறாக கனிமொழியின் தாயார் ராசாத்திக்கு சென்னையில் முக்கிய இடம் அளிக்கப்பட வேண்டும் என்று டாடாவிடம் ராசாத்தி கோரிக்கை வைத்தது ஆகிய அனைத்தும் மிகவும் ஆழமாக, கூர்ந்து ஆய்வு செய்யப்பட வேண்டியவை.

அமைச்சர்களை நியமனம் செய்யும் பிரதமரின் தனிப்பட்ட உரிமையை வெளி நபர்கள் பறித்துக் கொண்டது குறித்த உண்மை வெளிக் கொண்டு வரப்பட வேண்டுமானால், கருணாநிதி, கனிமொழி, ராசாத்தி உட்பட நீரா ராடியாவுடன் நெருக்கமாக தொடர்பு வைத்துள்ளவர்கள் அனைவரையும் சிபிஐ விசாரிக்க வேண்டும்.

இது உடனடியாக செய்யப்பட வேண்டும். இதைப் பற்றிய முழு உண்மையையும் தெரிந்து கொள்ள இந்திய நாட்டிற்கும், இந்திய மக்களுக்கும் உரிமை இருக்கிறது.

வாங்க G வாங்க!




தொட்ட மனம்... தளர்ச்சியை எட்டிய கால்கள்... என மொத்த ஸ்ருதியும் இறங்கிய நிலையில் ஆ.ராசா திகார் சிறைக்குள் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டுள்ளார். ''வாங்கஜி வாங்க'' என்று அங்குள்ளோர் இகழ்ச்சியாக அழைத்தாலும் அவரால் என்ன பதிலளிக்க முடியும்?

றுகிய முகம்... கலங்கிய கண்கள்... பலவீனத்தின் எல்லையைத்

தொட்ட மனம்... தளர்ச்சியை எட்டிய கால்கள்... என மொத்த ஸ்ருதியும் இறங்கிய நிலையில் ஆ.ராசா திகார் சிறைக்குள் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்டுள்ளார். ''வாங்கஜி வாங்க'' என்று அங்குள்ளோர் இகழ்ச்சியாக அழைத்தாலும் அவரால் என்ன பதிலளிக்க முடியும்?

திகார் சிறை ஆசியாவிலேயே பெரியது. சுமார் 12 ஆயிரம் கைதிகள் இப்போது உள்ளனர். திகார் என்ற கிராமத்தில் உள்ள இந்தச் சிறை வளாகத்தில் ஒன்பது மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. சிறைச்சாலை எண் 1-ல் உள்ள வார்டுகள் மிகவும் பிரமாதமாக பராமரிக்கப்​படுவதைப் பாராட்டி, மாடல் வார்டுக்கான ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. சிறை எண் 1-ல் செல் எண் 9-ல் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச கிரிமினல்களும், இந்தியாவில் கொடூர தாதாக்களும் அடைந்து கிடக்கும், இந்த திகார் சிறைச்​ சாலைக்கு பிப்ரவரி 17-ம் தேதியன்று ஆ.ராசா கொண்டு வரப்பட்டார். ஏற்கெனவே இதே ஊழல் வழக்கில் கைதான சித்தார்த் பரூவா, ஆர்.கே.சந்தோலியா இருவரும் பிப்ரவரி 8-ம் தேதி முதல் இந்தச் சிறைச்சாலையில்தான் இருக்கிறார்கள். இங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையங்கள் உண்டு. உள்வட்டப் பாதுகாப்புகளை டெல்லி யூனியன் பிரதேச சிறைத்துறை போலீஸார் கவனிக்கிறார்கள். இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் வெளிவட்ட பாதுகாப்புப் பணியில் இருக்​கிறார்கள். தமிழக போலீஸின் ஆயுதப் படை பிரிவைச் சேர்ந்த சுமார் ஆயிரம் போலீஸார் டவர் கண்காணிப்பு, ஹை ரிஸ்க் வார்டு பாதுகாப்பு, சர்ப்ரைஸ் செக்கிங் மற்றும் சிறைச்சாலை ரோந்து போன்ற பணிகளை பல வருடங்களாகச் செய்து வருகிறார்கள். ஆ.ராசா அடைக்கப்பட்டிருக்கும் ஹை ரிஸ்க் வார்டு செல்லின் எண் 9-ஐ நுழைவாயில், செல் கதவு... என்று ஐந்து பூட்டுகளைக் கடந்துதான் அடைய​முடியும். இந்த வார்டினை சிறைச்சாலை அதிகாரிகளும், தமிழக ஆயுதப்படைப் பிரிவு போலீஸாரும் கூட்டாகத்தான் திறக்கவேண்டும் என்பது சட்டம். இந்த வார்டுக்கு மற்ற கைதிகள் வரமுடியாது. அதேபோன்று, இங்கே இருப்பவர்களும் சிறைச்சாலைகளின் மற்ற இடங்களுக்குச் செல்ல முடியாது. 24 மணி நேரமும் ரகசிய கேமரா கண்காணிப்பு உண்டு.

டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவரிடம் நாம் பேசியபோது, ''சிறைச்சாலையில் உள்ள சாதாரண கைதிகளுக்கும் ஹை ரிஸ்க் வார்டில் உள்ள கைதி​களுக்கும் வசதிகளில் பெரும் வித்தியாசம் உண்டு. ஆ.ராசா அடைக்கப்பட்டுள்ள அதே சிறைச்சாலையில் உள்ள செல் ஒன்றில்தான், பெண் பத்திரிக்கையாளர் ஷிவானி கொலைவழக்கில் கைதான அரியானா மாநில ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.கே.சர்மா அடைக்கப்பட்டு இருக்கிறார். இங்குள்ள செல் ஒவ்வொன்றிலும் ஒன்று அல்லது மூன்று பேர்கள் அடைக்கப்​படுவார்கள். அந்த​வகையில், தனி செல்தான் ராசாவுக்கு ஒதுக்குவார்கள். வார்டு வளாகம், வெளி ஏரியாக்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ரகசிய கேமராக்கள் இருக்கின்றன. குறிப்பாக, ஹை ரிஸ்க் வார்டு செல்லில் உள்ள கைதிகளின் மூவ்மென்ட்களை எல்லா நேரமும் கன்ட்ரோல் ரூமில் இருந்தபடி, கண்காணிப்பார்கள். செல்லில் ஃபேன், கேபிள் டி.வி. வசதி உண்டு. சிறைச்சாலையின் பொது இடத்தில் வாரத்துக்கு இருமுறை டி.வி.டி. பிளேயர் வைத்து திரைப்படங்கள் ஒளிபரப்புவார்கள். விரும்பும் பத்திரிகையை வார்டுக்கு வரவழைத்துப் படிக்கலாம். செல்லின் ஒரு மூலையில் இண்டியன் டைப் டாய்லெட் இருக்கும். அதைத்தான் தினப்படி கைதி பயன்படுத்த வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படுகிறது. ஜீன்ஸ் பேன்ட் தவிர வேறு எந்த டிரஸ்ஸையும் அணியலாம். கைதியே அவரது உடைகளை துவைத்துக்கொள்ள வேண்டும். அயர்ன் பண்ண சிறைச்சாலையில் வசதி உண்டு.

ஒரு ஸ்பெஷல் கேன்டீன் உண்டு. இங்கே ஸ்நாக்ஸ் முதற்கொண்டு அனைத்து அயிட்டங்களும் கிடைக்கும். மாதம் நாலாயிரம் ரூபாய் வரை செலவு செய்யலாம். இந்த தொகையைக் கொடுத்து டோக்கன் வாங்கி செல்லில் வைத்துக்கொள்ளலாம். ஹை ரிஸ்க் வார்​டில் இருப்பவர்கள் இந்த கேன்டீனுக்குப் போக அனுமதி​யில்லை. அதனால், 'சேவாதார்' என்று அழைக்கப்படும் ஹெல்பர்களை பொருள் வாங்கி வர பயன்படுத்திக் கொள்ளலாம். இதே சிறைச்சாலையில் வேலை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்பவர்களும் உதவுவார்கள். அந்த வகையில் அவர்களுக்கும் காசு கிடைக்கும். டால், ரொட்டிதான் முக்கியமான உணவு. வெஜிடபிள் சப்ஜி தருவார்கள். மற்றபடி, நான்வெஜ் கிடையவே கிடையாது!'' என்றார்.

கைதிகளின் பெயர்களின் முதல் எழுத்து ரொம்ப முக்கியம். வாரத்தின் ஒவ்வொரு நாளையும் குறிப்பிட்ட எழுத்துகளைக் கொண்டவர்களுக்கு என பிரித்து வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், ராசாவின் முதல் எழுத்தான 'ஆர்', 'ஏ’ மற்றும் 'எஸ்’ எழுத்து கொண்டவர்களை திங்கள் அன்று உறவினர்கள் நேரில் பார்க்கலாம். பார்வையாளர்கள் அறையில் ஐம்பது மைக்குகள் இருக்கும். சந்திக்க வருபவருக்கும் கைதிக்கும் இடையில் இடைவெளி இருக்கும். ஒரே நேரத்தில் இங்கிருந்து ஐம்பது பேர்கள் மைக்கில் எதிர்புறம் உள்ள கைதிகளிடம் பேசுவார்கள். கூச்சல், குழப்ப​மாகத்தான் இருக்கும்.

திகார் சிறைச்சாலையில் நுழைந்த ராசாவிடம் அங்குள்ள விதிமுறைகளையும் நடைமுறைகளையும் அதிகாரிகள் விலாவாரியாகச் சொன்னார்களாம். அவர்​களிடம் சில சந்தேகங்களைக் கேட்ட ராசா, அவர்கள் சொன்ன பதிலைக் கேட்டு முகம் உறைந்து போனாராம். 'கைது செய்தால் மட்டுமே அவர் குற்றவாளி இல்லை’ என்று ஆ.ராசாவுக்கு சான்று தந்த தங்கள் தலைவர், திகார் சிறைக்குச் சென்று ராசாவை நேரில் பார்த்து திடப்படுத்துவரா என்பது அவருடைய ஆதரவாளர்களின் ஆர்வமான எதிர்பார்ப்பு. மாற்றுக்கட்சியில் இருந்த போதும் பொடாவில் கைதான வைகோவை சிறையில் சென்று பார்த்த தலைவர், சொந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரை பார்க்காமலா இருப்பார் என்பது ஆ.ராசாவின் ஆதரவாளர்களின் நம்பிக்கை!

பிச்சை பாத்திரம் ஏந்த வந்தோம். அய்னே.. எங்கள் அய்யனே...

தொழில் அதிபர் ராசாத்தி அம்மாள்.


என்னடா இது புதுக் கதையாக இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா ? “காகிதப்பூ“ நாடகத்தில் கதாநாயகியாக நடித்தார் என்று தெரியும். கருணாநிதியின் மூன்றாவது மனைவி என்று தெரியும். என்னடா இது திடீரென்று சவுக்கு ராசாத்தி அம்மாளை தொழில் அதிபர் என்று அழைக்கிறதே என்

நீரா ராடியா என்ற பவர் ப்ரோக்கர் எவ்வளவு பெரிய ஆள் என்பது உங்களுக்குத் தெரியும். முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, சுனில் மிட்டல் போன்ற இந்தியாவின் மிகப் பெரிய தொழில் அதிபர்களெல்லாம் இவரது க்ளையன்டுகள் என்று தெரியும்.

இந்த நீரா ராடியாவோடு சரிக்குச் சமமாக பேச்சு வார்த்தை நடத்தினால் ராசாத்தி அம்மாளை என்னவென்று அழைப்பீர்கள் ? தொழில் அதிபர் என்று தானே .. … ? சவுக்கும் அப்படித்தான் அழைத்தது. ராசாத்தி அம்மாள் எதைப் பற்றிப் பேசினார் என்ற விபரத்துக்கு பின்னர் வருவோம். முதலில் இந்த உரையாடலைக் கேளுங்கள்.

று யோசித்தீர்கள் தானே ?

வேதம் ஓதும் சாத்தான்கள்.


இன்று இலங்கைத் துணைத் தூதரகத்தை திருமாவளவன் முற்றுகிகையிட்டு, தனது விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினருடன் கைதானார். அப்போது செய்தியாகர்களிடம் பேசுகையில், மிகவும் உருக்கமாக, ஒரு இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக் கூட அனுமதிக்காத ராஜபக்ஷே அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து விட்டு, உடனடியாக இலங்கைத் தூதரகத்தை மூட வேண்டும் என்றும், ஒரு எம்பியை இலங்கைக்குள் அனுமதிக்காமல் மறுத்ததன் மூலம், இந்திய அரசையே இலங்கை அவமதித்து விட்டது என்றும், இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.