பட்டுப்புழு
பட்டுப்புடவையில்வண்ணத்துப்பூச்சி
ஓவியமாக அழுதபடி...
அழுகை
பூமி அழுக்காவதைக் கண்டுமேகம் அழுகிறது....
மழை!
காதலியே...!
பிடிக்கவில்லை எனஒரு முறை
சொல்லியாவது விடு;
நீ பேசியதை -
குறிப்பெடுத்துக் கொள்கிறேன்!
நன்றி கடன்
அடுத்த பிறவியில்எனக்கு மகளாக
என் தாய்.......
ஒருதலைக் காதல்...
அவன்கானலுக்குள்
மீன் பிடித்தான்
ஒருதலைக் காதல்...!
காதலர்கள்!
இரு மீன்கள்மாட்டிக் கொண்டன
ஒரே தூண்டிலில்-காதல்!
ஒற்றை ரோஜா
தரை தொடாதவிழுதுகளில் ஊஞ்சலாடுகிறது...
அவள் கூந்தலில்
ஒற்றைரோஜா
மேகம்
தின்ன முடியவில்லைஉயரத்தில் பஞ்சுமிட்டாய்
வான் மேகம்!
காதல்
வெள்ளைக் காகிதத்தில்ஒற்றை வரிக் கவிதை
காதலியின் பெயர்!
தோல்வி
காதலித்தால்அழகு வரும்,
காதலில் தோற்றால்
அழுகை வரும்!



