Tuesday, June 15, 2010

தமன்னாவை தாக்கிய தொலைபேசி சுறா வலி !


தமன்னாவை மொத்த மீடியாவும் தூக்கி வைத்து கொண்டாடுவதில் ஒரு காரணம் இருகிறது. கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக இருந்தும் பிகு, பந்தா எதுவுமில்லாமல் பேட்டி என்று கேட்டவுடன் ஒகே சொல்கிற நாயகி மட்டுமல்ல. நாம் எதிர்பார்க்காமலேயே எந்த தயாக்கமும் இன்றி பதில் சொல்லக்கூடியவர். மொத்தத்தில் துணிச்சல் நாயகி. ஆனால் இந்த அதீத துணிச்சலால் முதல் முறையாக குட்டு வாங்கியிருக்கிறார். அதுவும் ஒரு கோலிவுட் விஐபியிடம்.

Friday, June 11, 2010

ராவணாவுக்கு எதிராக புது கோஷம்!


ரத்த சரித்திராவுக்கு பிரச்சனை அப்படியென்றால் ராவணாவுக்கு வேறு மாதிரி! சீதா பிராட்டிய நாங்க தெய்வமா கும்புடுறோம்.
ஆனா அவங்க ராவணன் கூட டூயட் பாடுற மாதிரி சீன் வச்சா எப்படிய்யா பொருத்துக்க முடியும்னு காவி கொடியை தூக்கி கலவரம் பண்ண கிளம்பிருச்சு ஒரு அமைப்பு. எலக்ஷன் நேரத்தில முளைக்கிற லெட்டர் பேட் கட்சின்னா விட்டுடலாம். இது வட மாநிலத்தில் கொஞ்சம் ஸ்டிராங்காகவே இருக்கிற இந்து ஜனசாக்ரன் சமீதி என்ற அமைப்பாம்!

இந்த அமைப்பின் சார்பில் சமீபத்தில் சென்சார் போர்டுக்கு ஒரு கடிதம் போயிருக்கிறது. அதில் குறிப்பிட்டுள்ள வார்த்தைகள்தான் மேலே நீங்கள் படித்தது. இராமயணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுகிற படம் என்றுதான் இந்த படத்தை பற்றிய தகவல்கள் வெளிவருகிறது. அப்படியிருக்கும் போது சீதா தேவி பாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யாராயுக்கும் ராவணன் கேரக்டருக்கும் இடையே காதல் துளிர்ப்பதாக காட்சிகளை வைத்திருப்பது நியாயமா என்கிறது இந்த அமைப்பு. எனவே இப்படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை உடனே திரும்ப பெற வேண்டும் என்று சென்சார் அமைப்பை வலியுறுத்துகிறதாம் அக்கடிதம்.

இல்லைன்னா…? படம் ரிலீஸ் ஆன தியேட்டர்ல காவிக் கொடியுடன் போராடுவோம் என்று எச்சரித்திருக்கிறார்களாம். சிவனே…ன்னு கிடந்தாதான் சாமியாரு. மவனே…ன்னு பல்லை கடிச்சா?

உலகக் கோப்பை கால்பந்து இன்று துவக்கம்

உலக முழுவதும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வெள்ளிக்கிழமை தென்னாப்பிரிக்காவில் துவங்குகிறது. கால்பந்து பற்றி உங்களுக்கு ஆர்வம் இல்லை என்றாலும் கீழே உள்ள சுட்டியை ஒரு முறை கிளிக் செய்துவிடுங்கள்.

ரீமேக் படங்களை தேர்வு செய்து நடிக்கும் விஜய்

இளைய தளபதி விஜய் சமீப காலமாக ரீமேக் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது காவல்காரன் சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் விஜய்யின் அடுத்த படம் வேலாயுதம். இந்த படத்தை ஏராளமான எதிர்பார்ப்புகள் நிறைந்த படமாக ஜெயம் ராஜா இயக்க உள்ளார். தெலுங்கில் நாகர்ஜூனா, செளந்தர்யா நடித்து சூப்பர் ஹிட்டான அசத் படம் தான் தற்போது தமிழில் வேலாயுதம் என்ற பெயரில் ரீமேக் ஆக உள்ளது. ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் படமான அசத் படத்தின் திரைக்கதையை ஜெயம் ராஜா தனக்கே உரிய ஸ்டைலில் மாற்றி அமைத்து வருகிறார். வேலாயுதம் படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக விஜய்யின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் சித்திக் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் காவல்காரன் படமும் மலையாள படமான பாடிகாட்டின் ரீமேக் தானாம்.

Thursday, June 10, 2010

12 மணி நேரம் எழுதி லிம்கா சாதனை முயற்சி


காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி நாச்சாள், 12 மணி நேரம் தொடர்ந்து எழுதி, லிம்கா சாதனைக்கு முயற்சியில் ஈடுபட்டார். கலைவாணி வித்யாலயா பள்ளி மாணவியான இவர், நேற்று காலை 10.40 மணிக்கு இம்முயற்சியை தொடங்கினார். ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நல்வழி, உலகநீதி, திருப்பாவை, திருத்தாண்டகம், திருநீற்றுப்பதிகம், சிவபுராணம், செயம்கொண்டார் சதகம், திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம், பாரதிதாசன் கவிதைகளை, எந்தவித குறிப்பையும் பார்க்காமல் எழுதினார். ஒரு மணி நேரத்திற்கு நான்கு நிமிடம் மட்டும் ஓய்வு எடுத்து கொண்டார். இரவு 10.40 மணி வரை, 110 பக்கங்கள் எழுதினார். தாளாளர் நாராயணன், முதல்வர் கண்ணன், தமிழாசிரியர் செயம்கொண்டான் பாராட்டினர்.

ரஜினி-கமலின் ‘இன உணர்வு’ அல்லது ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்


ராகவேந்திரா கல்யாணமண்டபத்தில் தனது ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, கர்நாடகாவை கடுமையாக விமர்சித்து பேசியது பாராட்டுக்குரியதுதானே?





இதற்கு முன்பு தமிழர்களுக்கு எதிராக வன்முறை செய்த கன்னடர்களை விமர்சிக்காமல் இருந்ததற்குக் காரணம், கர்நாடகாவில் இவர் படம் ஓட வேண்டும் என்பதுதற்காகத்தான். ஒக்கேனக்கல் பிரச்சினையின் போது, நிர்பந்தத்தின் காரணமாக, மேடையில் சத்யராஜ் போன்றவர்களின் மிக நேரடியான குற்றச்சாட்டின் நெருக்கடியின் காரணமாக கன்னடர்களை ரஜினி திட்டிப் பேசினார்.

அதன் விளைவாக ‘குசேலன்’ பட வெளியிட்டின் போது கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கன்னடர்களை திருப்தி படுத்துவதற்காக மன்னிப்பும் கேட்டார். அந்த மன்னிப்பின் மறுபக்கம், தமிழகத்தில் ரஜினி ரசிகர்கள் கணிசமான பிரிவினர் ‘அவனா நீ?’ என்று குசேலன் படத்தை புறக்கணித்தனர். (பி. வாசுவும் படத்தில் தன் பங்களிப்பை கணிசமாக செய்திருந்தார்.)

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக போய்விடுமோ என்ற பயத்தில்தான் ரஜினியின் இந்த கன்னட எதிர்ப்பு வீர வசனமும். ஈழத் தமிழர்கள் மீதான சென்டிமென்ட்டும்.

இதே காரணங்களுக்காகத்தான் நமது ‘உலக நாயகன்’ (என்ன கொடுமை சார் இது?) கமல்ஹாசன், தமிழர் பிரச்சினைகளுக்காக எந்த மேடையில் ஏறி பேசினாலும், பட்டும் படாமலும் ரொம்ப உஷாராக, ஒரு அத்துவைதியை போல் பேசுகிறார். (அய்யங்கார இருந்துக் கிட்டு அத்துவைதைத்தை ஆதரிக்கிறாரு, என்ன பெருதன்மை!)

‘தமிழன் என்கிற குறுகிய எண்ணத்தோடு….’ என்று கமல் பேசியதற்கு அர்த்தம், உண்மையிலேயே அவர் தன்னை உலக நாயகன் என்று நினைத்துக் கொண்டு பேசினார் என்று அர்த்தமாகாது.‘அது சும்மா தமாசு’ என்பது அவருக்கே தெரியும். வேறு மொழிகளிலும், பிற மாநிலங்களிலும் அவருடைய படங்கள் டப்பிங் செய்யப்படுகிறது, நேரடியாக வெளியாகிறது என்பதுதான் அதற்கு அர்த்தம்.

கமலின் முந்தைய சாமார்த்தியமான அந்தப் பேச்சினால்தான் கர்நாடகத்தில், ‘குசேலனுக்கு’ வந்த எதிர்ப்பு ‘தசாவதாரம்’ என்கிற அய்யங்கார் அரசியல் படத்துக்கு வரவில்லை. (அய்யங்கார் மேன்மையை வலியுறுத்தியதால்தான் அந்தப் படத்தின் மீது அய்யர்களுக்குக்கூட கோபம். சில அய்யர்கள் பார்ப்பன எதிர்ப்பாளர்கள் போன்ற போர்வையில் அந்தப் படத்தை கடுமையாக எதிர்த்தார்கள்.)

ஆக, ரஜினி - கமல் இருவருக்கும் கன்னடர், தமிழர் என்கிற இன உணர்வெல்லாம் கிடையாது. அவர்களிடம் ‘பண உணர்வு’ மட்டும்தான் இருக்கிறது.

குறிப்பு

கதாபாத்திரத்திற்கு எந்தவகையிலும் பொறுத்தம் இல்லாமல், தேவர் மகன் படத்தில், வாலி என்கிற அய்யங்கார், ‘கமல்ஹாசன்’ என்கிற அய்யங்காரை ‘தமிழச்சி பால் குடிச்சவன்டா’ ‘சங்கத் தமிழன், சிங்கத் தமிழன்’ என்று சொறிந்து விட்டதையும், அந்த சொறியை எடுத்து, இது ‘நியாயமான அரிப்புதான்’ என்கிற பாணியில் சுஜாதா என்கிற அய்யங்கார், ‘குமுதம்’ என்கிற அயங்கார் பாட்டனர் பத்திரிகையில் பக்குவமாக ‘தேய்த்து’ விட்டதையும், ‘தமிழன் என்கிற குறுகிற எண்ணத்தோடு…’ என்று கமல் இப்போது பேசியதையும் தொடர்புபடுத்தி புரிந்து கொள்ள வேண்டாம். அப்படி புரிந்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.


ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்’ என்று அவர்களின் ‘கொள்கைகளை’ வைத்துதான் தலைப்பிட்டேன். மற்றப்படி கே.பாலசந்தரை நான் ‘குட்டை’ என்று சொல்லிவிட்டதாக அர்த்தப்படுத்திக் கொண்டால், அதற்கும் நான் பொறுப்பல்ல.

அதேபோல், ‘தமிழன் என்பது குறுகிய எண்ணம், அய்யங்கார் என்பது பரந்த எண்ணமா?’ என்று கேள்வி கேட்காதீர்கள்.



ஆவி பறக்க ஒரு பஞ்சாயத்து நடிகர் சங்கத்தில் விஜய்.


நேற்றிரவு சுமார் 7 மணியிருக்கும். நடிகர் சங்க வளாகத்தில் விருட்டென்று வந்து நின்றது விஜய்யின் கார். உள்ளேயிருந்து இறங்கியது சாட்சாத் அவரேதான்! அடுத்தடுத்த சில நிமிடங்களில் துவங்கியது அந்த காரசாரமான விவாதம். நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஏற்பாட்டில் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார் விஜய். கூடவே அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும், சுறா பட தயாரிப்பாளர் சங்கிலி முருகனும் இருந்தார்கள்.பொதுவாக இதுபோன்ற சிக்கலான பிரச்சனைகளை அப்பா முடிவுக்கு விட்டுவிட்டு ஹாயாக படத்தில் நடிக்கப் போய்விடும் விஜய், நேரடியாக பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டது இதுவே முதல் முறை என்கிறார்கள் சிலர். ‘விஜய்க்கு ஒரு பிரச்சனைன்னா அதை பார்த்துகிட்டு சும்மாயிருக்க முடியாது. என்ன பிரச்சனை? சொல்லுங்க. அவரையே வரச்சொல்லி பேசுவோம்’ என்றாராம் சரத்குமார். இதையடுத்துதான் இந்த சந்திப்பு. ‘நான் என்ன செய்யணும் சொல்லுங்க’ என்று கேட்ட விஜய், திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பாக பன்னீர்செல்வம் சொன்ன சில கருத்துகளை மறுத்தும், ஆமோதித்தும் பேசிக் கொண்டிருந்தாராம். ஆனால் பேச்சு வார்த்தையில் முன்னேற்றத்தின் அளவு நினைத்த மாதிரி இல்லை என்றதும் பன்னீர் செல்வமும் அவருடன் சென்றிருந்த மற்றொரு நிர்வாகி ஸ்ரீதரும் அங்கிருந்து வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது.

பிறகு தனது முடிவிலிருந்து சற்று இறங்கி வந்த விஜய், மீண்டும் அவர்களை அழைத்து பேசினாராம். இருதரப்பும் ஒரு புதிய முடிவை எட்டியிருப்பதாக கூறுகிறார்கள். அது என்ன என்பது இன்னும் இரண்டொரு நாளில் தெரிய வரலாம்.

சன் டிவிக்கு தற்காலிக குட் பை…! விஜயின் அதிரடி முடிவு…!


சுறா கருவாடாக தங்களை வாடி வதங்கச் செய்துவிடும் என்று கனவிலும் நினைக்கவில்லை விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும். தென்மாவட்டங்களில் மட்டும் 160 திரையரங்க உரிமையாளர்களுக்கு டேர்ம்ஸ் முறையில் திரையிட்ட வகையில் ஐந்து முதல் பதிணைந்து லட்சம் வரை இழப்பைச் சந்தித்திருப்பதாக கணக்கு காட்டியிருப்பதாக தகவல் கிடைக்கிறது.

எல்லா டி.வி.யும் எனது டி.வி.தான் - கலைஞர்

1 vote

வழக்கம் போல் கலைஞர் பேசியுள்ளார் டென்ஷன் ஆகாதீங்க :-)
எல்லா டி.வி.யும் எனது டி.வி.தான் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் ராஜ் டி.வி.யின் 24 மணிநேர செய்தி சேனலைத் தொடங்கி வைத்து அவர் பேசியது...

எனது பெயரிலேயே ஒரு டி.வி. சேனல் இருக்கும்போது மற்றொரு டி.வி. சேனலுக்கு விளம்பரம் தருகிறாரே என்று சிலர் கருதலாம். எல்லா டி.வி.யும் எனது டி.வி.தான். எல்லா டி.வி.யும் நான் வளர்க்க வேண்டிய டி.வி.தான்.

ராஜ் டி.வி. வளர்ந்து அரசுக்கும் அதன் மூலம் பொதுமக்களுக்கும் நன்மை கிடைக்குமானால் அதனை நான் பாராட்டுவேன். போற்றுவேன். அதற்கு ஆக்கமும் ஊக்கமும் அளிப்பேன்.

எப்போதுமே விழாவுக்கு அழைப்பவர்கள் உண்மையும் பேச வேண்டும். உண்மைக்கு மாறானதையும் பேச வேண்டும். அதைத்தான் "பொய்மையும் வாய்மையிடத்து' என்று வள்ளுவர் கூறியிருக்கிறார். நல்லது நடக்கும் என்றால் பொய்கூட சொல்லலாம் என்ற வள்ளுவரின் வாக்கைப் பின்பற்றி பொத்தானை அழுத்தினால் மட்டும் போதும் என்று அழைத்து வந்துவிட்டு என்னைப் பேச வைத்து விட்டார்கள்.

தொலைக்காட்சிப் பெட்டிகளை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். அதனால்தான் திமுக அரசு இலவச கலர் டி.வி.க்களை வழங்கி வருகிறது. இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற ஆரம்பித்து விட்டன

விஜயகாந்த் - கடவுள் : கூட்டணி சந்திப்பு


மக்களுடனும், கடவுளுடனும்தான் கூட்டணி என்று கேப்டன் விஜயகாந்த் கூறியிருந்ததை இணையம் மூலம் அறிந்த கடவுள் அவரைத் தேடி பூலோகம் வருகிறார்.

கேப்டனை சந்திக்க விருத்தாசலம் செல்கிறார். அவரைப் பல வருடங்களாக அங்கு காணவில்லை என அறிந்ததும், கேப்டனைத் தேடி சாலிகிராமத்தில் அமைந்துள்ள அவர் வீட்டிற்குச் செல்கிறார்.

வாசலில் வாட்ச்மேனிடம்..

கடவுள் : நீங்க தான் கேப்டனா?

வாட்ச்மேன் : யார் நீங்க? பார்க்க இந்திரலோகத்தில் நா.அழகப்பன் மாதிரியே இருக்கீங்க.... ஏ.வி.எம் ஸ்டுடியோ அந்த பக்கமா இருக்கு.

கடவுள்: நான் அழகப்பன் இல்லை எல்லோருக்கும் அப்பன்.

வா.மேன்: பிரசாரத்துக்கு எம்.ஜி.ஆர், சிவாஜி மாதிரி வேஷம் போடுவாங்க, நீ என்ன வடிவேலு மாதிரி வேஷம் போட்டுகிட்டு இங்கேயே வரிங்களா என்ன தில்லு?

கடவுள்: உங்களுக்கு சொன்னால் புரியாது நான் கேப்டனை பார்க்க வேண்டும்.

வா.மேன்: எந்தக் கட்சி? கூட்டணியெல்லாம் கிடையாது. அதெல்லாம் பேசி முடிச்சாச்சு. மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி. போங்க.. போங்க..

கடவுள் : ஆ.. அதே வாக்கியம். மகா வாக்கியம். இந்த வாக்கியத்திற்குச் சொந்தமானவரைத்தான் தேடி இங்கு வந்தேன். அது சரி, கூட்டணிதான் பேசி முடிப்பார்கள் எனக் கேள்வி பட்டிருக்கிறேன். கூட்டணி இல்லை என்றும் கூடவா பேசி முடிப்பார்கள்?

வா.மே: (மனதிற்குள்)அய்யய்யோ.. இவர் நிலைமை புரியாம பேசுறாரே.. கூட்டணி வெக்காம இருக்கிறதுக்கு முதலாளி பொட்டி வாங்கிட்டருங்கிற புரளியை நம்பி விசாரிக்க வந்த ஆபீசரா இருப்பாரோ!

வாட்ச்மேனை உற்று நோக்கியவாரே..

கடவுள் : நான் யார் என்பது இருக்கட்டும். நீ யார்? இங்கு கேப்டன் என்பவர் வசிக்கிறாரா?

வா.மே: (நாம் மனதிற்குள் யோசிப்பது இவருக்கு எப்படித் தெரிந்தது, சந்திரமுகி சரவணனோ என்று பயந்தபடி) ஐயா.. நான் தான் வாட்ச்மேன்.. அதாவது இந்த வீட்டின் காவலாளி.

கடவுள்: ஓ.. நீர்தான் இந்த வீட்டில் உள்ளவர்களைக் காப்பவரா? அப்படி என்றால் இந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நீர்தான் கடவுளோ?

வா.மே: அய்யய்யோ சாமி. என் பொழைப்புல மண்ணை அள்ளி போட்டுறாதீங்க. நான் இங்கே வேலை பார்க்குறவன். அவ்ளோதான். நீங்க வேணும்னா உள்ள போங்க சாமி.

வீட்டிற்குள் நுழைகிறார் கடவுள்..

அவரைப் பார்த்தவுடன், கேப்டன் எழுந்து நிற்கிறார்.

விஜயகாந்த் : (கும்பிட்டபடி) வணக்கம்.

கடவுள் : ஆ.. நீ ஞானி! என்னைப் பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டாயே!!

விஜயகாந்த் : நான் ஞாநி இல்லை.. ஓ போடுறவர் நான் இல்லை. அறிவாலயத்தில் இருந்து அவரைத் தூக்கிட்டு வர உங்களை அனுப்பியிருக்கிறார்களா? வீடு மாறி வந்துவிட்டீர்கள்!!

கடவுள் : சே..சே.. அடிப்பது என் தொழில் இல்லை. அரவணைப்பது மட்டுமே என் தொழில். ‘நான் கடவுள்’. நீ என்னைப் பார்த்து வணங்கியவுடன், என்னை அடையாளம் கண்டு கொண்டாயே என்பதற்காக உன்னை ‘ஞானி’ என விளித்தேன்.

விஜய : என்னது! கடவுளா?

கடவுள் : ஆம்.

விஜய : வாங்க சாமி. உட்காருங்கள். இது தேர்தல் நேரம். அதனால் யாரைப் பார்த்தாலும் கும்பிடுவோம். தவறாக நினைத்துவிட்டீர்கள்!

கடவுள் : எவரையும் வணங்குவீரா?

விஜய : ஆமாம் சாமி. அதற்குப் பெயர்தான் ‘வாக்கு சேகரிப்பு’.

கடவுள் : இருக்கட்டும். அதெல்லாம் எனக்குத் தேவையில்லை. உமது இயற்பெயர்?

விஜய : விஜயராஜ் சாமி. மக்கள் என்னை கேப்டன் என்று அழைப்பார்கள்.

கடவுள் : ஓ.. கேப்டன்! சென்ற வாரம் கூட சில பத்திரிகைகளில் கேப்டன் கங்குலி என்பவரின் பல் பிடுங்கப்பட்டதைப் படித்தேனே! அவரா நீர்?

விஜய : அது கிரிக்கெட் கேப்டன் கங்குலி. பிரபுதேவா ஒருவருக்கு தொப்புளில் ஆம்லெட் போட்டாரே.. நக்மா.. அந்த நக்மாவுடைய முன்னாள் காதலர். நான் மக்களுக்கு கேப்டன். நான் ஆம்லெட் போட மாட்டேன். பம்பரம்தான் விடுவேன்.

கடவுள்: பம்பரம் ? பம்பரம் விட வைகோவிடம் பர்மிஷன் வாங்கினீரா ?

விஜய: சாமி அது அரசியல் பம்பரம். நான் சொல்லுவது சினிமா பம்பரம்.

கடவுள் : ஓ.. ஆம்லெட்.. பம்பரம்.. இதெற்கெல்லாம் கூட தொப்புள் பயன்படுகிறதா? அடக் கண்றாவியே..

விஜய : ஆமாம் சாமி. உங்களுக்கு ஆம்லெட், பம்பரமெலாம் போட மாட்டோம். நெத்தியில் நாமம்தான். ஸ்ரீரங்கத்தில் போய் பாருங்கள்..

கடவுள் : அது சரி.. கேப்டன்? அது ஆங்கிலச் சொல்தானே.. கேப்டன் என்றால் அணித் தலைவன் என்றுதானே பொருள்? நீர் எந்த அணிக்குத் தலைவன்?

விஜய : நான் எந்த அணியிலும் இல்லாதவன். தனியே நிற்பவன். மக்களுடனும், கடவுளுடனும் மட்டும்தான் எனக்குக் கூட்டணி.

கடவுள் : என்னது கடவுளுடனா? என்னோடு எப்போது கூட்டணி சேர்ந்தீர்கள் கேப்டன்? என்னிடம் நீங்கள் கேட்கவே இல்லையே?

விஜய : அதனால்தான் உங்களோடு கூட்டணி. உங்களிடம் மட்டும்தான் கேட்கத் தேவையேயில்லை. ஊரில் எத்தனையோ பேர் உங்கள் பெயரைப் பயன்படுத்தி முன்னுக்கு வருகிறார்கள். சிலர் தன்னைக் கடவுளின் தூதன் என்கிற ரேஞ்சுக்கு சொல்லிக்கொள்கிறார்கள். சிலர் “நான் கடவுள்” என்று தன்னையே கடவுளாகச் சொல்லிக் கொள்கிறார்கள். சிலர் வீரமாக உங்களையே இல்லை என்று சொல்லி Money சேர்க்கிறார்கள். யாரைக் கேட்க வேண்டும்? நீங்களும், பொதுமக்களும்தான் இப்படி யார் எதைச் சொன்னாலும் ரியாக்சன் காண்பிக்காமல், பங்கு கேட்காமல் கூட்டணியில் இருப்பீர்கள். அதனாலதான் உங்களோடு கூட்டணி.

கடவுள் : அடப்பாவிகளா.. பூமியில் இவ்வளவு விஷயங்கள் நடக்கின்றனவா?

விஜய : ஆங்.. இன்னும் நிறைய நடக்கிறது சாமி. கூட்டணி வைத்தால் ஒரு ரேட்டு. கூட்டணி வைக்காவிட்டால் ஒரு ரேட்டு. அவ்வளவு ஏன், தனியாக நிற்பதற்குக் கூட கோடி கோடியாகக் காசு தருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

கடவுள் : அபசாரம்.. அபசாரம்.. இன்னும் என்னென்ன கண்றாவிகள் நடக்கின்றன?

விஜய : அட.. அதை விடுங்கள் சாமி.. எல்லாவற்றையும் கேட்டீர்கள் என்றால் என்னோடு கூட்டணி வைக்க நீங்களும் காசு கேட்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

கடவுள் : கவலைப்படாதீர்கள் கேப்டன். நான் அப்படிப்பட்டவன் கிடையாது.

விஜய : இப்படித்தான் சில மக்கள் என்னைப் பத்தியும் நினைக்கிறார்கள் சாமி. அங்கேதான் உங்களுடைய அருள் எனக்கு இருக்கிறது. நீங்கள் என்னுடன் இருக்கும்வரை யாரும் என்னை அசைக்க முடியாது சாமி.

கடவுள் : மானிடா.. அப்படியெல்லாம் ஆணவத்தில் பேசக் கூடாது. அடக்கம் அவசியம்.

விஜய : அய்யய்யோ சாமி.. அப்படிச் சொல்லாதீர்கள். என்னுடைய பலமே வாய்க்கு வந்தபடி ஒருவர் விடாமல் எல்லோரையும் திட்டுவதுதான் சாமி.

கடவுள் : அது தவறு மானிடா. மற்றவர்களைப் பழிக்கும் உரிமையை நான் எந்த மானிடனுக்கும் கொடுக்கவில்லை.

விஜய : (மனதுக்குள்)உங்ககிட்ட கேட்டா நான் உங்களோட கூட்டணி சேர்ந்தேன்.. இதையும் கேட்கிறதுக்கு.

கடவுள் : நீ இவ்வாறு நினைப்பதும் தவறு மானிடா.. என்னையே அவமதிக்கிறாயே.. என்ன செய்வது? நான் சொல்லி யார் கேட்கிறீர்கள்?

விஜய : சாமி.. மனதிற்குள் நினைப்பதை எல்லாம் கூட கண்டுபிடித்துவிடுகிறீர்களே! நல்ல வேளை.. மக்களுக்கு இந்த மாதிரியான சக்தியில்லை. இருந்திருந்தால் நம்கதி அதோகதி தான்.

கடவுள் : என்னது நம்கதியா? ஏன் மானிடா.. என்னையும் இதில் சேர்த்துக் கொள்கிறாய்?

விஜய : பின்னே.. சேர்க்காவிட்டால் எப்படி? நாம் இரண்டுபேரும் ஒரே கூட்டணிதானே!

கடவுள் : இல்லை மானிடா.. இவ்வளவையும் கேட்ட பிறகு மனிதர்களுடன் கூட்டணி வைக்க நான் தயார் இல்லை. இங்கே தேர்தலை நடத்தும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது? அவர் எங்கே இருக்கிறார்?

விஜய : அந்த அதிகாரம் படைத்த இடத்தின் பெயர் “தேர்தல் கமிசன்”. அது தில்லியில் இருக்கிறது சாமி. ஏன் கேட்கறீங்க?

கடவுள் : நான் அங்கே சென்று முறையிடப் போகிறேன் மானிடா. எந்த மானிடனுடனும் எனக்குக் கூட்டணியில்லை என முறையிடப் போகிறேன்.

விஜய : ஹா.. ஹா.. அது நடக்காது சாமி! தனியாக நிற்பதற்கு ஒரு ரேட்டு என்று சொன்னேனே.. அதில் கோடிகளோடு சேர்த்து, கட்சிச் சின்னம், நவீன பலம் எல்லாமே அடக்கம். போங்கள், உங்களால் எல்லாம் இதில் இனி எதுவும் செய்யமுடியாது. வேண்டுமென்றால் முதலமைச்சரானால் அறநிலையத்துறை வேண்டுமென்றால் தருகிறேன். ஆமாம், நீங்கள் எந்த மதம் சாமி? சரி எதாகவும் இருந்துவிட்டுப் போங்கள். இந்துமதக் கோயில்களுக்கு எந்த மதக் கடவுளும் என்றில்லை, கடவுளே இல்லை என்று சொல்பவர்கள்கூட அதிகாரிகளாகவும் மந்திரியாகவும் இருக்கலாம். தமில்நாட்டில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்கள் 637. கட்டுப்பாட்டில் இருந்தும் கட்டுப்படாத கோயில்கள் 274. கட்டுப்பாட்டில் இல்லாவிட்டாலும் கட்டுப்பட வேண்டியவர்களுக்குக் கட்டுப்பட்டு....

கடவுள்: என் பெயரை சொல்லி என்னையே முட்டாள் ஆக்கிவிட்டார்களே

விஜயகாந்த்: ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!. இப்ப நீங்க முட்டாள், மக்களும் முட்டாள் அதனால் தான் உங்களுடன் கூட்டணி வைத்திருக்கிறேன்... ஆங்

கடவுள் விட்டு விடுதலையாகி தலைதெறிக்க ஓடுகிறார்.

கல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்

வெள்ளைக் கதருக்குள்
கறுப்பாய்
ஒரு
பச்சைத் தமிழன் .

நீ
கல்விச்சாலையில்
கற்றது கைமண் அளவு
ஆனால்
கல்வி சாதனையில்
கடந்தது கடல் அளவு.

விருது நகரின் விழுது
வெள்ளந்தி மனது.

நீ
சம்சாரக் கடலில்
மூழ்காத
கட்டைப் பிரம்மச்சாரி.
உன்னிடம்
பந்தமும் இல்லை
பந்தாவும் இல்லை.

நீ
ஏழைக் குழந்தைகளுக்குக்
கூட்டானவன்
ஆனால்
ஏட்டுச் சுரைக்காய்களுக்கு
வேட்டானவன்.

பலமான அணைகளைப்
பரிசாகத் தந்தவன் - பல
பாலங்கள் கட்டத்
தானே
பாலமாய் இருந்தவன்.


அறம் பேசிய
உன் வாய்
புறம் பேசியதில்லை
அடுக்கு மொழி தெரியா
உன் நாக்கு என்றும்
தடம் புரண்டதில்லை.

வெட்டும் துண்டும் உன்
வார்த்தையில் மட்டும்தான்
வாழ்க்கையில் இல்லை.

நீ செவிக்கும் வயிற்றுக்கும்
சேர்ந்தே ஈய்ந்தவன்
சமுக நீதிக்கே
சருகாய்த் தேய்ந்தவன்.

உன்னிடம்
வார்த்தை ஜாலமும் கிடையாது
உனக்கு
வாரி சுருட்டவும் தெரியாது.

நீ
விடியலுக்கு வித்து
கல்விக் கதிரவன்
என்பதைக்
காலத்தே கண்ட
தொலை நோக்கி.

நீ
கையூட்டு பெறும்
அரசியல்வாதிகள்
தொடக்கூடாத
கையேடு.

நீ
நான்கு வேட்டி மட்டுமே
சொத்தாய்க் கொண்ட
நல்லவன்
நாடாளும் வித்தையில்
கரை கண்ட
வல்லவன்.

நீ
ஒரு நாளும்
தலை தாழ்ந்ததில்லை
அதனால்தானோ என்னவோ
உம்மைத் தோற்கடித்த நாங்கள்
இன்னமும்
தலை நிமிரவே இல்லை !!

எது தமிழ் புத்தாண்டு ?

திருவள்ளுவர் ஆண்டு துவக்கம் தான் தமிழ் புத்தாண்டா ? அல்லது சித்திரை மாதம் துவக்கம் தான் தமிழ் புத்தாண்டா ? என்று சிலர் குழம்பி மற்றவர்களையும் குழப்பியுள்ளார்கள்.

வாழ்த்து சொல்லிப்பாருங்க அவர்களின் கொள்கைகளை பொறுத்து பதில் கிடைக்கும் என்று வேற விளக்கியுள்ளார்கள். சரி.


இன்று வந்த சில தலைப்பு செய்திகளை பார்த்தால் தெரியும் யாருக்கு எந்த கொள்கை என்று.

தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து - தினமணி
தலைவர்கள் சித்திரை திருநாள் வாழ்த்து - தினத்தந்தி
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு - தினமலர்


மற்ற பத்திரிகைகள் என்ன தலைப்பு என்று நீங்களே பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

கலைஞர் மாற்றிவிட்டார் என்பதால் தமிழ் புத்தாண்டு சித்திரை புத்தாண்டாகிவிடுமா ? கலைஞர் தன்னுடைய பிறந்த தேதியை எப்படி மற்ற முடியாதோ அதே போல தான் தமிழ் புத்தாண்டை மற்ற முடியாது. சித்திரை தமிழ் புத்தாண்டு என்பது ஹிந்து மக்களின் நம்பிக்கை.

திருவள்ளுவர் ஆண்டு துவக்கம் தான் தமிழ் புத்தாண்டாக மாற்ற வேண்டும் என்றால் செம்மொழி தமிழ் புத்தாண்டு என்று மாற்றிக்கொள்ளுங்கள். யார் கேட்கப்போகிறார்கள் ? சித்திரை மாதம் பிறக்கும் தமிழ் புத்தாண்டை மற்ற மதத்தினரும் கொண்டாடினால், நிச்சயம் கலைஞர் அதை மாற்றியிருக்க மாட்டார்.

எதுக்கு வம்பு என்று இரண்டையும் கொண்டாடலாம் என்று புத்திசாலியாக நினைப்பவர்கள், எனக்கு இரண்டு பிறந்த நாள் என்பது போல மடத்தனம். அப்படியே கொண்டாடினாலும், விலைவாசி ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டு இருக்கும் இந்த காலத்தில் காய்கறி, பழம் எல்லாம் இரவோடு இரவாக ஸ்டாக் செய்து வைத்தால் இன்னும் விலை ஏறிவிடாதா ? அது கூட பரவாயில்லை காலையில் எழுந்து முகம் பார்க்கும் கண்ணாடியில் நாலும் கிழமையுமா பார்த்துக்கொண்டு இருந்தால் நல்லாவா இருக்கு ?

நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்கு பிறகு தோனி இவ்வாறு பேசினார் "சென்னை மக்கள் என்னை மிகவும் நேசிக்கிறார்கள். முதலாவது சீசனில் நான் பைக்கில் வலம் வந்தேன். அப்போது சிக்னலில் நின்ற போது நிறைய பேர் என்னிடம் ஆர்வமாக தமிழில் பேசினார்கள். இதனால் நான் சென்னை காரனாகவே மாறி வருகிறேன். ரசிகர்கள் எல்லோருக்கும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்'என்றார்.

இதை கலைஞர் கேட்டுக்கொண்டு இருந்தார்.



விஷு என்று அழைக்கப்படும் மலையாள புத்தாண்டை மலையாளிகள் ஏப்ரல் 14-ந் தேதி சிறப்பாக கொண்டாடுகிறார்கள். அவர்களை பார்க்கும் போது மணிரத்தினம்பாலசந்தரின் அழகன் படத்தில் ஒரு குழந்தை "நாம வேற வீட்டில பிறந்திருக்கலாம்" என்று சொல்லும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

எது எப்படியோ எல்லோருக்கும் அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்துகள்.

நேற்றைய செய்தி, இன்றைய கார்ட்டூன்

சிறந்த கவிதை எழுதுவது எப்படி

என்னுடைய கவிதை எழுதுவது எப்படி என்ற முந்தைய பதிவை படித்திருப்பீர்கள்.

இப்பொழுது சிறந்த கவிதை எழுதுவது எப்படி என்பதைப் பார்ப்போமா?

ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பேனாவையோ பென்சிலையோ எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது காகிதத்தில் "ம" என்று எழுதுங்கள்.

"ம"விற்குப் பக்கத்தில் "ழ" என்று எழுதுங்கள்.

அதற்குப் பக்கத்தில் "லை" என்று எழுதுங்கள்.

"மழலை" என்று எழுதியிருக்கிறீர்களா?

இப்பொழுது சொல்லுங்கள், மழலை - அதாவது ஒரு குழந்தையை விட அழகான சிறந்த கவிதை இந்த உலகத்தில் இருக்கிறதா? இல்லவே இல்லை.

சிறந்த கவிதை எழுதுவது எவ்வளவு சுலபம் பார்த்தீர்களா?

பின்னர் வேறொரு பாடத்தில் சந்திப்போமா?

ஆனந்த் டொப்டலோவ் - Game 5 & 6


சாம்பியன்ஷிப் போட்டியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

போட்டியின் ஒரு பாதி முடிந்துள்ள நிலையில் ஆனந்த் 3.5-2.5 என்ற வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

கலைஞர்

கலைஞர் 2 காலால் நடக்கும் முன்றாம் தமிழ்
5 விரல்களை அகலவிரித்துக்காட்டி
ஐந்துமுறை அரியணை
ஏறிய ஆறாம் அறிவு
அரசியல் அரங்கில்
குத்துப்பாடுகளுக்கு நடுவில்
குன்றாமல் நிமிர்ந்து இருக்கும்
பத்துப்பாட்டு
மறுபடியும் மதுரை
வந்திருக்கும் தமிழ்ச்சங்கம்
எல்லோருக்கும் நீ கலைஞர்
எனக்கு நீ கடவுள்
என் உயிர் எனும் பயிர்
நிமிர்ந்து இருப்பது உன்னால்
எங்கள் பாட்டரசை பாராட்ட
வந்திருக்கும் நாட்டரசு
உறுதியானது உன் கூட்டணி
தலைவர் என்று உன்னை
தலைமேல் தாங்க
தமிழகம் தவம் இருக்கும்
தமிழ்மணம்
இருக்கும்போது
திண்டிவனம் எதற்கு
உழவர்பால் உருகிய உனது
சிந்தை உருவாக்கியது
உழவர்சந்தை
விவசாயிகளை பற்றி
விஜயகாந்த் கேட்க
நீ பதில் சொல்ல
வேண்டியது இல்லை
சமத்துவபுரம் சமைத்தவன் நீ
சரத்துமாருக்கு பதில் சொல்ல
வேண்டியது இல்லை
எப்படி பறப்பது என்பதௌ
விட்டில் பூச்சிகள்
சொல்லிக்கொத்தா
விமானத்துக்கு தெரியவேண்டும்
நீ மூத்த தலைவன், புகழ்
பூத்த தலைவன்
தடியில்லாத பெரியார்
பொடியில்லாத அண்ணா
இருவரும் உன்வடிவில்
இருக்கிறார்கள் ஒண்ணா

அரிவாளை சீண்டிவிட்ட 'அவாள்'


போன வாரம் கலைஞர் நாய்கள் கூடச் சிரிக்குமய்யா!' என்ற தலைப்பில் 'அவாள்' கவிதை(?) ஒன்றை முரசொலியில் எழுதியிருந்தார் முதலமைச்சர். இவராக இருக்குமோ ? அவராக இருக்குமோ ? என்றெல்லாம் பலர் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில்...கவிதை யாரை பற்றியது என்பது முக்கியாமில்லை; சில கேள்விகள் தமிழக முதலமைச்சருக்கு :


1. முதிர்ந்த அரசியல் தலைவர் இப்படியெல்லாம் தரம்தாழ்ந்து கவிதை எழுதலாமா? சிறுபிள்ளைத்தனமாக இல்லையா ?

2. பிராமண சமூகத்தவரை மட்டுமே ஏன் எப்போது எழிவு படுத்துகிறீர்கள் ? அடுத்த முறை உங்க கனவில் அண்ணா, பெரியார் வரும் போது நல்ல அறிவுரைகளை கேட்டு தெரிந்துக்கொள்வீர்களா ?

3. மைனாரிட்டி அரசாக இருந்தாலும் நீங்கள் தமிழ் நாட்டுக்கு முதலமைச்சர் என்பது தெரியுமா ? சாதிகளை பற்றி பேசும் நீங்கள் அந்த பதவிக்கு தகுந்தவரா ?

4. 'ஐந்து முறை பதவிப் பிரமாணம் எடுத்திருக்கும் உங்களுக்கு 'எந்த விருப்பும் வெற்ப்பும் இன்றி..' என்று பிரமாணத்தில் வரும் வரியின் பொருள் தெரியுமா? அதைக்கூட விடுங்கள். இப்படி 'அவாள்' என்று பேசுவதுதான் பகுத்தறிவா?


5. தேர்தலில் இதை பகிரங்கமாகச் சொல்லி, அவாள் ஓட்டு வேண்டாம் என்னும் தைரியமும் நேர்மையும் கொஞ்சமாவது உண்டா?



கீழே உள்ள கவிதை(?) விகடன் தளத்தில் பாலு என்பவர் கமெண்டாக எழுதியிருந்தார்.

Wednesday, June 9, 2010

கவிஞர் வாலி வாழ்த்திப் பாடிய கவிதை..


சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற கலைஞரின் `பொன்னர் சங்கர்’ திரைப்பட தொடக்க விழாவில் காவியக் கவிஞர் வாலி வாழ்த்திப் பாடிய கவிதை..

சக்கர நாற்காலியில் உலாவரும்
சர்க்கரைத் தமிழே!
உன்னைத் - தனக்கான
உலகத் தலைவன் என -
ஆராதிக்கிறது
அக்கரைத் தமிழே!
எங்கள் மண்
என்னும் பெண்
மங்கலம் காக்கும்
குங்குமச் சிமிழே!
நீ மட்டும் இல்லையெனில் - புகழ்
நீண்ட இனத்தாரின் -
நிலையும் கலையும்
நீர்க்குமிழே!
***

உனது பேனா - ஓர்
உறை வாள்; அதன்
உள்ளே தமிழ்த்தாய்
உறைவாள்!
முடை நாற்றமெடுக்கும்
மூடத் தனங்களின்
முனைகள்
முறியுமா தானா? - அவற்றை
முறித்திருக்கிறது -
மூனா கானா பேனா!
***
உலகத் தமிழினம்
உன்னைத் தான் தொழுகிறது;
அதிசயமில்லை; உன் பேனாதானே
அவர்க்காக அழுகிறது!
உலக
உருண்டையில் -
ஒரு மூலையில் உள்ள
ஒரு தமிழனுக்கு -
ஜலதோஷம் என்றால் - உனக்குத்
தும்மல் வருகிறது; அவனுக்கு
சந்தோஷம் என்றால் - உனக்குத்
துள்ளல் வருகிறது!

***
தாழ்ந்திருந்தது
தமிழன் தகத்து; அதை
உயர்த்தியது
உந்தன் எழுத்து!
உன் தமிழெனும் சம்மட்டியால்
தகர்த்திருக்கிறாய்,
எத்துணையோ தடவை
எம்தமிழரின் கால்களில்
இலங்கை - மாட்டிய
விலங்கை!
ஒருநாள் - நீ
உண்ணா நோன்பிருந்து
நீக்கினாய் சோறை;
நிறுத்தினாய் போரை;
உண்மையில் நீதான்
உலகத் தலைவர்;
அடுத்தவரெல்லாம்
அப்படிச் சொல்லி அலைவர்!

***



உன்
வருகைக்கு முன் ...
மடமையெனும்
மலச்சிக்கலில் -
தவித்துக் கிடந்தது
தமிழ் சினிமா: அதன்
குடல் சுத்தமாக - நீதான்
கொடுத்தாய் இனிமா!

***
தமிழின்
தகத்தகாயமான
உயரங்களை
உனது -
வசனம் தொட்டது; தமிழுக்கு
விசனம் விட்டது!
***
தித்திக்கத்
தித்திக்க - நீ
தீட்டிய
தீந்தமிழ் -
உரையாடல்களை
உச்சரித்த
உதடுகளுக்கு வந்தது
சர்க்கரை வியாதி; தமிழ்
உலகுக்கு வந்தது
சமூக நீதி!

***
நீ
தமிழுக்கும்;
தமிழ் மண்ணுக்கும்
பண்ணிய தொண்டுகளை
எண்ணினால்...
எம்மநோக்கு வருகிறது
நன்றிக் காய்ச்சல்;
நன்றி இல்லார்க்கு வருகிறது
பன்றிக் காய்ச்சல்!

***
திரும்பவும் கலைஞரின் பேனா
திறக்கிறது மூடி; அது
புதுரத்தம்
பாய்ச்ச -
கும்மென்றிருக்கும்
கோடம்பாக்கத்தின் நாடி!
கலைஞரின்
கைவண்ணத்தில் வரும்
‘பொன்னர் சங்கர்’ - ஒரு
வின்னர் சங்கர்!

கலைஞர் எழுப்பியது
உளியின் ஓசை;
வாலி எழுப்புவது
ஜால்ரா ஓசை;
விருது பெரும் ஆசை?
வேண்டாம் பேராசை! ( நன்றி: Kasu Sobhana)

ஐபில் விவகாரம் சூடு பிடித்ததால் இவர் கைது விஷயம் மீடியாவில் இரண்டாம் பக்கம் சென்றுவிட்டது. பாவம் இவரையும் ஏதாவது ஒரு அணியில் சேர்த்துக்கொள்ளும் படி இட்லிவடை சிபாரிசு செய்கிறது. யார் கண்டது, இன்னும் தோண்டினால் நித்தியா கூட ஓர் அணிக்கு ஓனராக இருக்கலாம்.

ஒருவர் தன்னுடைய சர்தார்ஜி நண்பருடன் ஒரு ஹோட்டலில் இரவு உணவு சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது திடீர் என்று மின்சாரம் போய்விட்டதாம். சில நிமிடங்கள் கழித்து மின்சாரம் வந்த போது, சர்தார்ஜியை பார்த்த நண்பர் திடுக்கிட்டு போனார். சர்தாரின் முகம் முழுக்க சாப்பாடு அப்பி இருந்தது. நண்பர் கேட்டார், "என்ன சர்தார்?ஏன் இப்படி ஆக்கி வைத்து இருக்கிறீர்கள்?" அதற்கு சர்தார் சொன்ன பதில், "இருட்டில் எனக்கு என் வாய் எங்க இருக்குன்னு தெரியலை"

நம்ம எல்லாம் இப்படி வெட்டியா சர்தார் ஜோக் சொல்லிக்கொண்டு இருப்போம். உண்மையில் சர்தார்ஜிகள் புத்திசாலிகள். பலசாலிகள். டிவியில் ராணுவ பரேட் காண்பிக்கும் போது கவனித்து பாருங்கள். நிறைய டர்பன் தலைகள் தெரியும். நாட்டுப்பற்று மிக்கவர்கள்.அவர்களுக்கு என்று நிறைய ஒழுங்குகள் இருக்கின்றன.பொய் சொல்ல மாட்டார்கள். திருட மாட்டார்கள். யாரிடமும் கையேந்த மாட்டார்கள். இறைநம்பிக்கை(அவர்களுடைய குரு மீது) இல்லாத ஒரு சர்தாரை கூட பார்ப்பது கடினம். இப்படிப்பட்ட "values " நிறைய உடைய ஒரு சர்தார் சேல்ஸ்மானின் கதை தான் Rocket Singh.

பொதுவாக மே முதல் வாரத்தில் அக்னி நட்சத்திரம் ஆரம்பம் ஆகும் என்பதும் அந்தக் காலக் கட்டத்தில் ரொம்பக் கஷ்டம் என்பதும் மக்கள் அறிந்ததே. இந்த வருஷம் மே 4-அன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.

அனால், அதுக்கு முன்னாடியே ஏப்ரல் 30-அன்றே மக்களுக்கு கஷ்டம் ஆரம்பம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு கஷ்டம் வந்தாலே கஷ்டம். இந்த வருஷம் ரெண்டு.

மக்கள் ஜாக்ரதையா இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Tuesday, June 8, 2010

Kavithai



இனியவளே !

இனியவளே !
இன்பக்கனி ஆனவளே !
என் உலகம் நீயென‌
எண்ணியிருந்தேன்..
துன்பம் தந்தென்னை
துரத்துவதேன்..
வந்த சொந்தங்கள்
விலகியபோதும்
உன் விழிகளில் எனக்கு
அடைக்கல‌ம் தந்தாய்

செவிகளில் நீங்கிடா
சிரிப்பு உதிர்த்தாய்...
தாய் போல் தயைகூர்ந்தாய்
தோழியல்ல நீ..
ஒரு நொடியும்
பிரிய மறுக்கிறது
என் மனம்...

இதயத்தில் புகுந்த
உன்னை எடுத்திட‌
நான் இறக்கும்வரை
காத்திரு...

என் கல்லறைக்கு
வந்து தோண்டிப்பார்...
இருதயம் துடித்திடும்
உன் விரல் பட்ட நோடியினில்..

வலிகள் கூட வசந்தமாகும்
நீ என் வாசல் தேடி
வரும் வேளையில்...

மணித்துளிகள் நொடியாகும்
உன் இதழ்கள் பேசிடும்
வேளையில்...

அழகியே !
நான் அறிவிலியே...
மூத்தவள் என்றால் என்ன‌
இளையவள் என்றால் என்ன‌
என் இனியவள் நீதானே...

சாதித்திட துடிக்கும்
சர்ப்பம் தான் நான்
பணிமனையும் எனக்கு
பாரமானது...
சாய்ந்திட உன் தோள்கள் இன்றி....

கோதிவிடும் கைகளுக்கு
எங்குகின்றேன்...
உன் விரல் நுனி
என்மேல் பட்டதும்
மோட்சம் அடைவேன் என்று...

சூடிடும் போவினில்
ஒரு இதழாய்
இருந்திட விரும்புகின்றேன்...
நீ ஆசையுடன் என்னை
சூடிடுவாய் என்று...

நெற்றியில் ஒட்டிடும்
பொட்டாய் இருந்திட
விரும்புகின்றேன்...
ஒட்டியிருப்பது ஒருநாள்
என்றாலும்
துளித்துளியாய் தோன்றிடும்
வியர்வைதுளிகள் என்னை
நனைத்திடும் என்று...

உன் செவிகளில் அணியும்
காதணியாய் இருந்திட
விரும்புகின்றேன்...
நீ சிரித்திடும் ஒலியினை
உனக்கு முன் கேட்டிட
வேண்டும் என்று.......

உன் கைக‌ளில் அணிந்திடும்
க‌டிகார‌மாய் இருந்திட
விரும்புகின்றேன்...
உன் இத‌ய‌த்தில் அடைப‌ட்டு
ஓடிக்கொண்டிருக்கும்
என் உயிர்த‌னை
ஒருமுறையாவ‌து
பார்த்திடுவாய் என்று....

உன் கால்க‌ளில் அணிந்திடும்
கொலுசாய் இருந்திட
விரும்புகின்றேன்...
வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
க‌வ‌ன‌மாய் ந‌ட‌ என்று
க‌ரையும் என் குர‌ல் கேட்பாய் என்று..

நீ க‌ட்ட‌ழ‌கு காட்டிடும்
உன் வீட்டு க‌ண்ணாடியாய்
இருந்திட விரும்புகின்றேன்...
உன்னை அறியாம‌ல்
உன் அழ‌கில் க‌ரை ந்திட வேண்டும் என்று...

நீ குளித்திடும் வேளையில்
பொழி ந்திடும் நீர்துளியாய்
இரு ந்திட விரும்புகின்றேன்..
ம‌ண்ணில் வீழ் ந்தாலும்
உன்னில் ச‌ரி ந்தேன் என்ப‌தை
நீ உணர மாட்டாயா என்று...


துவ‌ட்டிடும் துணியாய்
இருந்திட விரும்புகின்றேன்..
உன் மேல் இருக்கும்
துளிக‌ளால் வெந்து கிட‌க்கும்
என் ம‌னதினை ந‌னைப்பாய் என்று...

உன் பாத‌ங்க‌ளில் அணிந்திடும்
பாத‌ணியாய் இருந்திட விரும்புகின்றேன்...
உன்பிஞ்சு பாத‌ங்களை
ந‌ஞ்சு தீண்டாம‌ல்
காத்திட என் உயிர் பிரியும் வ‌ரை
போராடிடுவேன் என்று...

நீ ப‌டித்திடும் புத்த‌க‌த்தின்
ப‌க்க‌ங்க‌ளாய் இருந்திட
விரும்புகின்றேன்...
ப‌ரிச்சை நேர‌த்திலாவ‌து
என்னை தீண்டிடுவாய் என்று...

நீ எழுதிட உப‌யோகிக்கும்
எழுதுகோலாய் இருந்திட
விரும்புகின்றேன்...
நீ வ‌ளைத்திடும் வ‌ழியெல்லாம்
வரை ந்திடுவேன் என்னை
என்றே உன் வ‌ழி அறியாதா என்று....

உன் பிறை இடையினில்
மீண்டும் பிற‌ ந்திட விரும்புகின்றேன்...
இம்சை செய்தாலும் நான்
உன் இனியவ‌னாக
இரு ந்திட‌ வேண்டும் என்று...

நான் உன்னிட‌ம்
எதிர்பார்க்கும் அன்பை
நீ அப்பொழுதாவ‌து த‌ருவாய் என்று...

என்வாழ்வின் இர‌ண்டாம் பாக‌த்தில்
வ‌ருவாய் என்றெண்ணினேன்...
நீ விரும்ப வில்லை என்றால்
இப்பொழுதே சொல் இற‌ந்து பிற‌க்கிறேன்
உன் க‌ருவில்...

ஜோக்ஸ்

ஏன் சார் கடைசி மாடிக்கு மட்டும் சந்தனக் கலர் பெயிண்ட் அடித்திருக்கிறீர்கள் ? அது 'மொட்டை' மாடி ஆச்சே !

சூர்யா- ஜோதிகா

சூர்யா- ஜோதிகா திருமணம் கடந்த 2006-ல் நடந்தது. இவர்களுக்கு 2007 ஆகஸ்டு 10-ந்தேதி பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு “தியா” என பெயரிட்டனர்.

தற்போது மீண்டும் அவர் கர்ப்பமாக இருந்தார். நேற்று திடீர் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இன்று அதிகாலை 4 மணிக்கு ஜோதிகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அப்போது கணவர் சூர்யாவும், குடும்பத்தினரும் ஆஸ்பத்திரியில் இருந்தனர்.


Friday, June 4, 2010

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன்

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் என்று தடபுடலாக ஆரம்பித்தவுடன். வேட்டைக்காரன், சுறா எல்லாம் கண் முன்னே வந்துவிட்டு போனது. தைரியத்தை வர வழைத்துக்கொண்டு உட்கார்ந்தால் சூர்யாவின் 25 படம் என்று போட்டார்கள். கடவுளை வேண்டிக்கொண்டு என்னைத் தயார் படுத்திக்கொண்டேன்.