
கவிதை புதிர் கீழே...
ஞாயிறு அன்றும்
ஓய்வெடுக்காத ஞாயிறு
-------
விடியலுக்கு
விளக்கேற்றிய விரல்கள்
---------- எழுதுகோல்.
கைக் குட்டைக்குள் வானம்
குடத்திற்குள் குற்றால அருவி
முத்தமிழ் அறிஞர் --------
அமாவாசை இரவுகளிலும்
பௌர்ணமி வெளிச்சம்
-------- ஆட்சி
நெருப்பிலும்
ஒளிரும் தங்கம்
---------
இமயங்கள் சரியலாம்
கோபுரங்கள் சாயலாம்
தோல்வியை தழுவாத -------
எதிரிகளுக்கு அக்னி நட்சத்திரம்
மக்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம்
--------
ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணிகளாலும்
அசைக்க முடியாத ஆயிரங்கால் மண்டபம்
--------
இலையுதிர் காலத்தைத் தாண்டியும்
மணம் பரப்பும் தொல்காப்பியப் பூங்கா
--------
அண்ணா சாலையில் பவனிவரும்
திருவாரூர் தேர்
--------
காகித கப்பலையும்
கரைசேர்க்கும் மாலுமி
--------
சாலையோரத்து மக்களுக்கும்
ஆடை வழங்கும் கண்ணன்
--------
காகித விசிறிகளுக்கு மத்தியில்
தாலாட்டும் தென்றல்
--------
அறியாமைகள் அகற்றும்
ஆயுத எழுத்து
--------
மேலே உள்ள கவிதை(?) ஒரு பிரபல நாளிதழில் வந்தது. எழுதியவர் ஹரன்பிரசன்னா இல்லை. -------- என்ற இடத்தில் என்ன வரும் என்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். முடியாதவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள் :-) பிகு: சரியான விடை வரும் வரை பின்னூட்டங்கள் வெளியே வராது
No comments:
Post a Comment