திருவள்ளுவர் ஆண்டு துவக்கம் தான் தமிழ் புத்தாண்டா ? அல்லது சித்திரை மாதம் துவக்கம் தான் தமிழ் புத்தாண்டா ? என்று சிலர் குழம்பி மற்றவர்களையும் குழப்பியுள்ளார்கள்.வாழ்த்து சொல்லிப்பாருங்க அவர்களின் கொள்கைகளை பொறுத்து பதில் கிடைக்கும் என்று வேற விளக்கியுள்ளார்கள். சரி.
இன்று வந்த சில தலைப்பு செய்திகளை பார்த்தால் தெரியும் யாருக்கு எந்த கொள்கை என்று.
தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து - தினமணி
தலைவர்கள் சித்திரை திருநாள் வாழ்த்து - தினத்தந்தி
தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: நேரம் வந்தாச்சு நல்ல யோகம் வந்தாச்சு - தினமலர்
மற்ற பத்திரிகைகள் என்ன தலைப்பு என்று நீங்களே பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
கலைஞர் மாற்றிவிட்டார் என்பதால் தமிழ் புத்தாண்டு சித்திரை புத்தாண்டாகிவிடுமா ? கலைஞர் தன்னுடைய பிறந்த தேதியை எப்படி மற்ற முடியாதோ அதே போல தான் தமிழ் புத்தாண்டை மற்ற முடியாது. சித்திரை தமிழ் புத்தாண்டு என்பது ஹிந்து மக்களின் நம்பிக்கை.
திருவள்ளுவர் ஆண்டு துவக்கம் தான் தமிழ் புத்தாண்டாக மாற்ற வேண்டும் என்றால் செம்மொழி தமிழ் புத்தாண்டு என்று மாற்றிக்கொள்ளுங்கள். யார் கேட்கப்போகிறார்கள் ? சித்திரை மாதம் பிறக்கும் தமிழ் புத்தாண்டை மற்ற மதத்தினரும் கொண்டாடினால், நிச்சயம் கலைஞர் அதை மாற்றியிருக்க மாட்டார்.
எதுக்கு வம்பு என்று இரண்டையும் கொண்டாடலாம் என்று புத்திசாலியாக நினைப்பவர்கள், எனக்கு இரண்டு பிறந்த நாள் என்பது போல மடத்தனம். அப்படியே கொண்டாடினாலும், விலைவாசி ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டு இருக்கும் இந்த காலத்தில் காய்கறி, பழம் எல்லாம் இரவோடு இரவாக ஸ்டாக் செய்து வைத்தால் இன்னும் விலை ஏறிவிடாதா ? அது கூட பரவாயில்லை காலையில் எழுந்து முகம் பார்க்கும் கண்ணாடியில் நாலும் கிழமையுமா பார்த்துக்கொண்டு இருந்தால் நல்லாவா இருக்கு ?
நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிக்கு பிறகு தோனி இவ்வாறு பேசினார் "சென்னை மக்கள் என்னை மிகவும் நேசிக்கிறார்கள். முதலாவது சீசனில் நான் பைக்கில் வலம் வந்தேன். அப்போது சிக்னலில் நின்ற போது நிறைய பேர் என்னிடம் ஆர்வமாக தமிழில் பேசினார்கள். இதனால் நான் சென்னை காரனாகவே மாறி வருகிறேன். ரசிகர்கள் எல்லோருக்கும் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்'என்றார்.
இதை கலைஞர் கேட்டுக்கொண்டு இருந்தார்.
விஷு என்று அழைக்கப்படும் மலையாள புத்தாண்டை மலையாளிகள் ஏப்ரல் 14-ந் தேதி சிறப்பாக கொண்டாடுகிறார்கள். அவர்களை பார்க்கும் போது
எது எப்படியோ எல்லோருக்கும் அம்பேத்கர் ஜெயந்தி வாழ்த்துகள்.
No comments:
Post a Comment